Om மதிப்பீட்டு நோக்கில் கவிஞர் பா.விஜய்யின்
இலக்கியம் என்பது மக்கள் சமூகத்தை உள்ளடக்கியது. வடிவங்கள், அமைப்பு முறைகள், உத்திகள், பாடுபொருள்கள், அழகியல் தன்மைகள் என்று காலந்தோறும் மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டே வந்தாலும், அவை அனைத்தும் அந்தந்தக் கால மக்கள் சமூகத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்டே அமைந்தன. மக்கள் வாழ்வியலின் பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கிக் கொண்டு, மக்கள் வாழ்வியலில் நல்ல மாற்றங்களை உருவாக்கி வாழ்தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தான் எல்லா நல்ல இலக்கியங்களும் நோக்கங்களாகக் கொண்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இலக்கியங்களின் வளர்ச்சிக் கூறுகளில் ஒன்றாக இடம் பெறுவது பழந்தமிழ் இலக்கியங்களின் மீதான மறுபடைப்புகள் ஆகும். "வாழ்ந்து, பின் இழந்து போன உலகம் பொன்னுலகம், இடையில் வந்து சேர்ந்தது ஓர் இருள் உலகம்; பொன்னுலகம் மீட்டினால், வரும் ஒரு புது உலகம்" என்ற சிந்தனையையும், நம்பிக்கையையும் குறிப்பது "மீட்டுருவாக்கம்" என்ற கருத்தியலாகும். மனித குல வரலாற்றில் மீட்டெடுப்புகளுக்கானச் சிந்தனைச் சமூக மேம்பாட்டிற்கான ஒரு வாயிலாகவும், ஒரு உந்துதலாகவும் அமைகிறது. அவ்வரிசையில், தமிழின் ஒப்பற்றக் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரத்தினைக் கவிஞர் பா.விஜய் 'காற்சிலம்பு ஓசையிலே' என்னும் பெயரில் புதுக்கவிதை வடிவில் மறுபடைப்பாக்கம் செய்துள்ளார். இதில் கவிஞர் பா.விஜய் கையாண்டுள்ள உத்திமுறைகள், பொருண்மை மாற்றங்கள், சமகாலச் சிந்தனைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் இந்நூல் அமைகிறது
Vis mer